Home /News /entertainment /

நடிகர் ஜெய்ராமை கலாய்த்த கார்த்தி… பொன்னியின் செல்வன் பதிவு வைரல்

நடிகர் ஜெய்ராமை கலாய்த்த கார்த்தி… பொன்னியின் செல்வன் பதிவு வைரல்

பொன்னியின் செல்வன் படத்தில் கார்தி.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்தி.

முன்பு குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவை கிண்டல் செய்து கார்த்தி வெளியிட்ட பதிவும் வைரலானது. நாளை பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக நடிகர் ஜெய்ராமை கிண்டல் செய்து கார்த்தி வெளியிட்டிருக்கும் பதிவு ட்விட்டரில் கவனம் ஈர்த்து வருகிறது.

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

    Naane Varuven: நாளை மறுதினம் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

    பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, பலரின் காலர் ட்யூனாக மாறியது. இதற்கடுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ’சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியானது. கடந்த வாரம் அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.

    பொன்னியின் செல்வன் படத்தில் உளவு பார்க்கும் வல்லுனராக ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டரில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். இவருக்கும் வந்திய தேவனான கார்த்திக்கும் இடையிலான காட்சிகள் சுவாரசியம் நிறைந்ததாக நாவலில் இருக்கும்.

    ஜெயராமின் கேரக்டர் அறிமுகம் தொடர்பான பதிவை படக்குழுவினர் இன்றுவெளியிட்டனர்.



    இதனை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் கார்த்தி, ‘ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா.’ என்று கூறியுள்ளார்.

    ஜெய்ராம் ட்விட்டரில் இல்லாததால் அவரை ரிப்போர்ட், ப்ளாக் செய்ய முடியவில்லை என கிண்டல் செய்துள்ளார் கார்த்தி.

    முன்பு குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவை கிண்டல் செய்து கார்த்தி வெளியிட்ட பதிவும் வைரலானது. நாளை பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi, Ponniyin selvan

    அடுத்த செய்தி