புதிய தலைமையை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு தமிழ்நாடே உதாரணம் - நடிகர் கார்த்தி

புதிய தலைமையை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு தமிழ்நாடே உதாரணம் - நடிகர் கார்த்தி

கார்த்தி - ராஷ்மிகா மந்தனா

சுல்தான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி தற்போதைய அரசியல் களத்தை மேற்கோள்காட்டி பேசினார்.

  • Share this:
‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தனா.

ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று படக்குழுவினர் சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்றது. இதில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் கண்ணன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி,100 நடிகர்களுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்தது சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார். மேலும், படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசும்பொழுது புதிதாக ஒரு தலைமை வரும்போது மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும், அதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம் எனவும் தற்போதைய அரசியல் களத்தையும் மேற்கோள்காட்டி பேசினார்.
Published by:Sheik Hanifah
First published: