என்.ஜி.கே டீசர் எப்படி இருக்கு? - கார்த்தியின் அசத்தல் பதில்

பிப்ரவரி 14-ம் தேதி கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் தேவ் படம் திரைக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

news18
Updated: February 11, 2019, 7:45 PM IST
என்.ஜி.கே டீசர் எப்படி இருக்கு? - கார்த்தியின் அசத்தல் பதில்
நடிகர் கார்த்தி
news18
Updated: February 11, 2019, 7:45 PM IST
என்.ஜி.கே பட டீசரைப் பார்த்த நடிகர் கார்த்தி அதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது

கடந்த மாதம் 13-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் என்.ஜி.கே பட டீசர் பார்த்துவிட்டதாகவும், டீசர் வெறித்தனமாக இருப்பதாகவும் நடிகர் கார்த்தி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிப்ரவரி 14-ம் தேதி கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் தேவ் படம் திரைக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்... களைக்கட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் - வீடியோ

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...