Home /News /entertainment /

இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்:உழவர் விருதுகள் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு

இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்:உழவர் விருதுகள் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு

உழவர் விருதுகள் விழாவில் நடிகர் கார்த்தி

உழவர் விருதுகள் விழாவில் நடிகர் கார்த்தி

Uzhavar viruthugal 2022: விழாவில் பேசிய நடிகர் கார்த்தி (actor karthi) இன்ஜினியருக்கு பஞ்சம் இல்லாத தமிழ்நாடு, நானும் இன்ஜினியர் தான், வேறு தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும் என்று பேசினார்.

மேலும் படிக்கவும் ...
    கல்லூரியில் ப்ராஜெக்டை காசு கொடுத்து வாங்க வேண்டாம். இங்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று உழவர் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசினார்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

    நீர்நிலைமீட்பு, பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம்,சந்தைப்படுத்துதல் என விவசாயம் சார்ந்த புதுமைகளை விவசாயத்தில் உட்புகுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு விருதுகள் வழங்கபட்டது. தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

     

     

    நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் விருதிகளை வழங்கி பேசினர். நடிகர் கார்த்தி பேசும்போது,  விவசாய பெருமக்கள் வந்து விருதுபெருவது திருவிழாப்போல் உள்ளது. விவசாயம் பற்றிய கருத்துகளை பேசுவதன் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.

    இதையும் படிங்க: மரங்கள் நாம் பேசுவதை கேட்கிறது.. தன் வீட்டில் நடந்த சுவாரஸ்யம் குறித்து நடிகர் சூர்யா பேச்சு!


    சினிமா பற்றிய பேச்சுக்களுக்கு இடையே விவசாயம் சார்ந்த பேச்சுகளும் அதிகமாக என்னிடம் உள்ளது. நான் ஆலிவ் ஆயில் பயன்படுத்த வில்லை நம்ம ஊரு நல்லண்ணெய் தான் சாப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும். நான் கொடுத்த தொகை சிறியதுதான்.ஆனால் அது மீண்டும் விவசாயத்திற்குதான் போகபோகிறது.

    நுகர்வோரை விவசாயம் நோக்கி பார்க்க வைப்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது. இன்ஜினியருக்கு பஞ்சம் இல்லாத தமிழ்நாடு, நானும் இன்ஜினியர் தான், வேறு தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்.

    மேலும் படிக்க: இந்த வன்முறைக்கு யார் காரணம்? கலர்ஸ் தமிழுடன் சேர்ந்து விளக்கிய நடிகை குஷ்பு!


    கல்லூரியில் ப்ராஜெக்டை காசு கொடுத்து வாங்க வேண்டாம். இங்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். விவசாயம் சார்ந்த கருவிகள் கண்டு பிடிப்பதற்கான கண்காட்சிகள் நடத்த உள்ளோம் என்று பேசினார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Actor Karthi, Actor Surya, Farmers

    அடுத்த செய்தி