‘பில்லா’ பாடல் டிவியில் வரும்போதெல்லாம் நான் அணியும் ஸ்டைலான ட்ரஸ் இதுதான் - நடிகர் கார்த்தி

‘பில்லா’ பாடல் டிவியில் வரும்போதெல்லாம் நான் அணியும் ஸ்டைலான ட்ரஸ் இதுதான் - நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. கடந்த மாதம் அரசு பேருந்தில் தான் பயணித்த கல்லூரி கால புகைப்படத்தை பதிவிட்டிருந்த அவர், “சென்னை மக்களின் நம்பத்தக்க நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தற்போது தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் கார்த்தி, “குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த உடை இதுதான். எப்போதெல்லாம் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பில்லா படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா ’ பாடல் ஒளிபரப்பாகுமோ அப்போது டெனிம் ஜாக்கெட்டையும், இந்த பேன்டையும் ஸ்டைலாக அணிந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

கார்த்தியின் குழந்தைப் பருவ புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்தாலும், சிறுவயதிலேயே தான் ஒரு ரஜினி ரசிகர் என்று கார்த்தி தெரிவித்திருப்பதையும் குறிப்பிட்டு கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.



 




View this post on Instagram





 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)






கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்திருக்கும் நிலையில் ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘சுல்தான்’ ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் கார்த்தி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது
Published by:Sheik Hanifah
First published: