• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்

Youtube Video

நடிகர் கார்த்தி இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘சர்தார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘சர்தார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிடோர் நடிப்பில் ஏப்ரல் 2-ம் தேதி வெளியான படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் வசூலைக் குவித்து வெற்றிப்படமாக அமைந்ததோடு மாஸ்டர் படத்துக்குப் பின் தியேட்டர்களுக்கு மக்கள் வர காரணமாகவும் அமைந்தது.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்த இப்படம் மூன்று நாட்களில் ரூ.16 கோடி வரை வசூல் செய்து கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையை படைத்துள்ளது.

சுல்தான் படத்தின் பணிகளை முடித்த கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக முடி, தாடி என லுக்கில் வித்தியாசம் காட்டியிருந்த கார்த்தி அதே தோற்றத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. ‘சர்தார்’ என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நரைத்த தாடி, நீண்ட தலைமுடி, சுருங்கிய முகத்துடன் தோன்றியுள்ளார் கார்த்தி.



கார்த்தியின் 22-வது படமாக உருவாகும் இத்திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் ஒளிப்பதி செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் சர்தார் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



இரும்புத்திரை படத்தின் வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தை இயக்கினார் பி.எஸ்.மித்ரன். இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்தியுன் கரம் கோர்த்துள்ளார் பி.எஸ்.மித்ரன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: