Home /News /entertainment /

கிராமத்து திரைப்படங்கள்தான் கலாசாரத்தை கூறுகின்றன - நடிகர் கார்த்தி

கிராமத்து திரைப்படங்கள்தான் கலாசாரத்தை கூறுகின்றன - நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, சூரி, ராஜ்கிரன், நடிகை அதிதி, சரண்யா பொன்வண்ணன்,  இயக்குநர் முத்தையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
கிராமத்து திரைப்படங்கள்தான் கலாசாரத்தை கூறுகின்றன என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, சூரி, ராஜ்கிரன், நடிகை அதிதி, சரண்யா பொன்வண்ணன்,  இயக்குநர் முத்தையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நடிகர் கார்த்தி,  கிராமமும், அதன் கலாச்சாரமும் இன்றும் மாறாமல் உள்ளன.  கிராமத்தில் உறங்கும் போது தான் எந்த இடையூறும் இல்லாமல் உள்ளது, நிம்மதி இருக்கிறது என கூறினார்.

மேலும், கிராமத் திரைப்படங்கள் தான், நம் கலாச்சாரத்தை சொல்கின்றன.  உறவுகள் குறித்த முக்கியத்துவம் குறைந்து உள்ளது.  எனவே உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் வெளியாவது அவசியம்.  அதை முத்தையா தன் படங்கள் மூலம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார் என கூறினார்.

இந்த திரைப்படத்தில் அப்பா -  மகன் உறவு குறித்து படமாக்கியுள்ளோம் என கார்த்தி கூறினார்.  அத்துடன் நடிகர் ராஜ்கிரன் திரைப்படங்களில் நல்ல விஷயங்களை கூற வேண்டும், தவறான விஷயங்களை சொல்லி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.  அதை நமக்கும் சொல்லிக் கொண்டே இருப்பார் என பாராட்டினார்.

தற்போதைய காலகட்டத்தில் நம் ரசிகர்கள் கொரியன் உள்ளிட்ட பல படங்களை பார்த்து பழகியுள்ளனர்.  இதனால் கிராமத்து படங்களை பார்ப்பார்கள் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் ட்ரெய்லர் வெளியான பின்னர் அந்த பயம் நீங்கி விட்டது. விருமன் ட்ரெய்லரை பலரும் ஆதரித்துள்ளனர் என மகிழ்ச்சி அடைந்தார்.

Also read... கோவிலுக்கு எதிரானவன் நான் இல்லை - நடிகர் சூரி

கார்த்தியை போல் ராஜ்கிரன் பேசுகையில்,  மனிதனுக்கு பொறுமை, மன்னிப்பு, பெருந்தன்மை இருக்க வேண்டும். அது இந்த திரைப்படத்தில் முத்தையா கூறியுள்ளார். இது போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு தேவை என கூறினார்.

அதேபோல் இயக்குநர் முத்தையா பேசுகையில், உறவுகளை முன்னிலைப்படுத்தி திரைப்படங்களை எடுத்து வருகிறேன்.  அதற்கு உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.  நகரம் சார்ந்த திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.  இருந்தாலும் உறவுகள் கொண்ட திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படங்களை கொடுத்து வருகிறேன் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகை அதிதி, சரண்யா பொன்வண்ணன்,  சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Entertainment

அடுத்த செய்தி