Home /News /entertainment /

சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு - நடிகர் கார்த்தி கருத்து

சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு - நடிகர் கார்த்தி கருத்து

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாத்துறையினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகிவிடுகிறது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான் எனவும், அதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் திரைப்பட நடிகர் கார்த்தி நடித்து வெளியாகவுள்ள விருமன் திரைப்பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "மதுரை என்றாலே ஸ்பெஷல் தான். விருமன் 12ஆம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளது. கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படத்தில் நடித்து உள்ளேன்.

கிராமத்தில் உள்ள வீரம், பாசம், கேளிக்கை தனித்துவமாக இருக்கும். அதனடிப்படையில் இந்த படத்தில் நடதுள்ளேன்.இந்த நிகழ்ச்சி திருவிழா போல உள்ளது. மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் நடப்பது தான் சிறப்பு.



Also read... லண்டனில் தொடங்கியது அருண் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு

சினிமாத்துறை தயாரிப்பாளர்கள் சார்ந்த இடங்களில் நடைபெறும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான். மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான். அதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் சினிமாத்துறையினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகிவிடுகிறது"  என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி