அரசு ஒழுங்குமுறை ஆணையத்தில் சிறு தானியங்களுக்கான செயல்முறை யூனிட்டுகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 25-வது படமாக உருவாகி வருகிறது. இதனை இயக்குநர் ராஜு முருகன் இயக்குகிறார். அதோடு கார்த்தியின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரலில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இதற்கிடையே உழவன் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார் கார்த்தி. இதன் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் சிவக்குமார், நடிகர் ராஜ் கிரண், பொன் வண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அப்போது பேசிய கார்த்தி, “நம்மாழ்வார் ஐயா ஒரு ஆளாக எத்தனை வருடம் ஊர் ஊராக போய், மக்களை அழைத்து பேசியுள்ளார். இங்கே வருகிறவர்கள் அத்தனை பேரும் அவர் பெயரை தான் சொல்கிறார்கள். இதை நான் அடுத்த புரட்சி என்று நினைக்கிறேன். எந்த பக்கம் போய் சேர்ந்தாலும் எங்கே ஆரம்பித்தது என்று பார்த்தால், நம்மாழ்வார் ஐயா ஏற்கனவே சொன்னார் என சொல்கிறார்கள். அவரை நான் பார்த்திருக்கிறேன், அவரின் புத்தகம் படித்திருக்கிறேன், அவர் வீடியோ பார்த்திருக்கிறேன் என சொல்கிறார்கள். அவ்வளவு பெரிய புரட்சியை நம்மாழ்வார் உருவாக்கி இருக்கிறார். இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம்முடைய கடமை. இந்த இடத்தில் அரசாங்கத்துக்கு வைக்கும் மிகப் பெரிய கோரிக்கை என்னவென்றால், அரசு ஒழுங்குமுறை ஆணையத்தில் சிறு தானியங்களுக்கான செயல்முறை யூனிட்டுகளை ஏற்படுத்தி தர வேண்டும். நெல்லுக்கு இருக்கும் செயல்முறை யூனிட்டுகள் சிறு தானியங்களுக்கு சரி வராது. அதேபோல் அதிகாலையில் விவசாயிகளுக்கு அவர்களது பொருட்களை சந்தைக்கு கொண்டு வர பொது போக்குவரத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Karthi, Tamil Cinema