ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு அறிவிப்பு…

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு அறிவிப்பு…

சர்தார்

சர்தார்

சர்தார் திரைப்படம் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓ.டி.டி. வெளியீடு உரிமையை பிரபல நிறுவனமான ஆஹா தமிழ் கைப்பற்றியுள்ளது.

    இரும்புத் திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் சர்தார் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியானது. சர்தார் படத்தில், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனிஷ்காந்த், அஷ்வின் குமார் மற்றும் யூகி சேது ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படமும் வெளிவந்ததால் இரு படங்களுக்கும் இடையே நல்ல போட்டி காணப்பட்டது.

    இருப்பினும் விமர்சன ரீதியில் சர்தாருக்கு பாசிடிவான ரிவ்யூக்கள் கிடைத்தன. அதே நேரம் பிரின்ஸ் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்ததால், மறுநாள் முதற்கொண்டு பிரின்ஸ் திரையிடப்பட்ட தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, சர்தாருக்கு ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ஓ.டி.டி. உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

    வார நாட்களிலும் சர்தார் திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியதால் வசூல் தாறுமாறாக எகிறியது.  முக்கியமான காட்சிகள் நல்ல டீடெய்லிங்குடன் அமைந்திருப்பதாக இயக்குனர் மித்ரனுக்கு பாராட்டுகள் குவிந்தன. படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் லான்சன் டொயோட்டா காரை பரிசளித்தார்.

    ' isDesktop="true" id="835204" youtubeid="8OQzz_i3KFE" category="cinema">

    மேலும், சர்தார் படத்தின் அடுத்த பாகம் வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் சர்தார் திரைப்படம் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    WATCH – ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ‘ஜான் விக் 4’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்…

    இந்த நிலையில் சர்தார் படத்தின் ஓடிடி வெளியீடு உரிமையை ஆஹா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் சர்தார் திரைப்படம் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi