In The Name Of God: கார்த்தி வெளியிட்ட ‘இன் தி நேம் ஆஃப் காட்’ வெப் சீரிஸ் ட்ரைலர்!

கார்த்தி

தெலுங்கின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ப்ரியதர்ஷி இந்த வெப் சீரிஸில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.

  • Share this:
    இன் தி நேம் ஆஃப் காட் தெலுங்கு வெப் சீரிஸின் ட்ரெய்லரை நடிகர் கார்த்தி இன்று ட்விட்டரில் வெளியிட்டார்.

    இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன், பாபர் மசூதி இடிப்பு, அதற்கு முந்தைய அத்வானியின் ரத யாத்திரை, அது ஏற்படுத்திய பதட்டம், சாமானிய மக்களின் மனநிலை, அயோத்தி பிரச்சனைக் குறித்த அயோத்தி ராமர் கோவில் பூசாரியின் பேட்டி என பாபர் மசூதி இடிப்புக்கு பின்னாலிருந்த அரசியலை ஆவணப்படமாக்கியிருந்தார். அதன் பெயர், 'இன் தி நேம் ஆஃப் காட்.' அதற்கும் கார்த்தி இன்று வெளியிட்டிருக்கும் இந்த வெப் சீரிஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வன்முறை, செக்ஸ் என வேறு தடத்தில் பயணிக்கும் கதை இது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தெலுங்கின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ப்ரியதர்ஷி இந்த வெப் சீரிஸில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் நந்தினி ராய் முக்கிய வேடமேற்றுள்ளார். கதைப்படி இவர் திருமணமானவர். தனது கணவரை கொலை செய்துவிட்டு, ப்ரியதர்ஷியிடம், தனது ஜீப் டிரைவராக தற்காலிகமாக இருக்க முடியுமா என கேட்கிறார். நந்தினி ராயின் மீது ஆசைப்படும் ப்ரியதர்ஷியும் அதற்கு உடன்படுகிறார். அவர் ஓட்டிச் செல்லும் வண்டியில்தான் கொலை செய்யப்பட்டவனின் உடல் இருக்கிறது என்பது அவருக்கு தெரியாது.



    வன்முறை, செக்ஸ் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த வெப் சீரிஸை வித்யாசாகர் முத்துக்குமார் இயக்கியுள்ளார். Aha ஓடிடி தளம் இதனை வரும் 18 ஆம் தேதி வெளியிடுகிறது. இந்நிலையில், இன்று காலை இதன் ட்ரெய்லரை கார்த்தி தனது ட்விட்டரில் வெளியிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: