• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வேளாண் சட்டங்கள் ரத்து - வரலாற்று வெற்றி என நடிகர் கார்த்தி மகிழ்ச்சி

வேளாண் சட்டங்கள் ரத்து - வரலாற்று வெற்றி என நடிகர் கார்த்தி மகிழ்ச்சி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

பிரதமர் வேளாண் சட்டங்கள் ரத்து என அறிவித்தாலும், அது விவசாயிகளின் நலன் புரிந்து செய்த நடவடிக்கையாக விவசாயிகள் கருதவில்லை. நடைபெற இருக்கும் உபி தேர்தலை முன்னிட்டு செய்த நடவடிக்கையாகவே கருதுகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரு வருட போராட்டத்துக்குப் பின் மோடி அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது வரலாற்று வெற்றி என நடிகர் கார்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், கார்ப்பரேட்களின் பிடியில் இந்திய விவசாயம் சிக்கிக் கொள்ளும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்தது, ஆணிகள் பதித்தது, போலீஸைவிட்டு தாக்கியது, ரவுடிகளை ஏவி கலகம் விளைவித்தது, அரசியல்வாதிகளின் மகன்கள் விவசாயிகள் மத்தியில் காரை ஏற்றி கொலை செய்தது என அரசு தன்னால் முடிந்த அடக்குமுறைகளை விவசாயிகள் மீது ஏவி வந்தது. அதனை தாக்குப் பிடித்து விவசாய பெருமக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் நடிகர் கார்த்தி முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இன்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.



நடிகர் கார்த்தி, "மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய  வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Also read... நயன்தாராவின் கனெக்ட் கொரோனா ஊரடங்கில் எழுதப்பட்ட கதை!

பிரதமர் வேளாண் சட்டங்கள் ரத்து என அறிவித்தாலும், அது விவசாயிகளின் நலன் புரிந்து செய்த நடவடிக்கையாக விவசாயிகள் கருதவில்லை. நடைபெற இருக்கும் உபி தேர்தலை முன்னிட்டு செய்த நடவடிக்கையாகவே கருதுகின்றனர். அதனால் இந்த சட்டங்கள் எங்கு கொண்டுவரப்பட்டதோ அங்கு (நாடாளுமன்றம்) ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: