ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்கி - நயன் தம்பதியை வாழ்த்தி கடிதம் அனுப்பிய கார்த்தி!

விக்கி - நயன் தம்பதியை வாழ்த்தி கடிதம் அனுப்பிய கார்த்தி!

கார்த்தி

கார்த்தி

தமிழ் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணமானது. இந்த நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளம் பகுதியில் கடந்த 9ம் தேதி அறிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியை வாழ்த்தி நடிகர் கார்த்தி கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணமானது. இந்த நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளம் பகுதியில் கடந்த 9ம் தேதி அறிவித்தார்.

அந்த குழந்தைகள் வாடகை தாயின் மூலமாக பெற்றெடுத்துள்ளனர்.  இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகளும், விமர்சனங்களும் ஒருசேர குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி, நயன்தாரா -  விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பெற்றோர் அணிக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நான்கு பேரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

Also read... சிரிச்சிக்கிட்டே உள்ள வந்தாங்க... இப்போ அழுதுகிட்டே இருக்காங்க - பிக்பாஸில் கார்னர் செய்யப்படுகிறாரா ஆயிஷா?

இந்த கடிதத்தை தன்னுடைய சமூக வலைதளப் பகுதியில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.  தங்களுக்கு குழந்தை பிறந்திருப்பதால் குழந்தைகளை பராமரிக்க மூன்று மாதங்களுக்கு சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Director vignesh shivan, Nayanthara