ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 67-ல் விஜயுடன் நடிக்கிறேனா...? லோகேஷை வம்புக்கு இழுத்து பதில் சொன்ன கார்த்தி!

தளபதி 67-ல் விஜயுடன் நடிக்கிறேனா...? லோகேஷை வம்புக்கு இழுத்து பதில் சொன்ன கார்த்தி!

விஜய் மற்றும் கார்த்தி

விஜய் மற்றும் கார்த்தி

சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, இயக்குனர் மித்ரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,  தயாரிப்பாளர் லட்சுமணன்,  ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறாரா என்பது குறித்து நடிகர் கார்த்தி விளக்கியுள்ளார்.

இந்தாண்டு பொன்னியின் செல்வன், விருமன் படங்களை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் மூன்றாவது படமாக தீபாவளிக்கு வெளியானது சர்தார்.  இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 வேடத்தில் கார்த்தி இடம்பெற்றுள்ளார். ஜிவி பிரகாஷ் சர்தார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, இயக்குனர் மித்ரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,  தயாரிப்பாளர் லட்சுமணன்,  ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

பேசிய நடிகர் கார்த்தி,  நாட்டிற்காக தியாகம் செய்யும் படங்கள் சமீபத்தில் வரவில்லை.  இதில் இடம்பெற்ற சர்தார் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் பொழுது பெருமையாக இருந்தது.  நாட்டுக்காக தன்னை சார்ந்த அனைத்தையும் ஒருவன் தியாகம் என்பது மிகப்பெரிய விஷயம். அதை செய்யும் சர்தார் கதாபாத்திரம் தனக்கு நெருக்கமாக இருந்ததாகவும் பெருமிதம்கொண்டார்.

Also read... 2011 டூ 2022.. அப்படியே இருக்கும் விஜய்.. வைரலாகும் வாரிசு ஸ்டில்ஸ்!

மேலும் இந்தப் படத்தின் கதையை எளிதில் சொல்லி விடலாம்.  ஆனால் எடுக்க முடியாது. அந்த அளவிற்கு நுணுக்கமான படம் சர்தார் அதை சிறப்பாக செய்து முடித்தார் என இயக்குநர் மித்ரனை  பாராட்டினார் கார்த்தி. அதேசமயம் இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு, தான் எங்கு சென்றாலும் 10 லிட்டர் சில்வர் கேனில் தண்ணீர் எடுத்து செல்ல தொடங்கிவிட்டேன் எனவும் கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்தி பேசினார். அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நீங்க நடிப்பீங்களா என்று கார்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கார்த்தி, அடுத்த வருசம் ஆரம்பிக்கிறோம்... லோகேஷ் ஓக்கேதான என்று நகைச்சுவையாக கூறினார். மேலும் அவ்வளவு ஈசி இல்லை நீங்க கேக்குற மாதிரி... ரெண்டும் வேற வேற தயாரிப்பாளர்கள், வேற வேற ரைட்ஸ் என ஏகப்பட்ட சிக்கல் இருக்கு. நாம ஆசைப்படலாம் ஆனா அந்தந்த நேரத்தில் பேசிதான் சரிபன்னனும் என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Actor Vijay