திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி யுவனுக்கு நடந்த பாராட்டு விழாவின்போது விலை உயர்ந்த ப்ரீமியம் வாட்சை பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சிறுவயது முதலே நண்பர்களாக உள்ளனர். கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்திற்கு யுவன் இசையமைத்திருப்பார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் பருத்தி வீரனை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. கார்த்தி அடுத்து நடித்த பையா படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ஃப்ரெஷ்ஷாக உள்ளன.
இதையும் படிங்க - 13 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்தில் இணையும் பிரபுதேவா…
இதன்பின்னர் நான் மகான் அல்ல, பிரியாணி உள்ளிட்ட கார்த்தி நடித்த படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டு, யுவனுக்கு விலை உயர்ந்த ப்ரீமியம் வாட்சை கார்த்தி பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க - 2 நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த வாடிவாசல் பாடல்… லெஜண்ட் சரவணனுக்கு குவியும் பாராட்டு
ஆகஸ்ட் 31-ம்தேதி வெளிவரவுள்ள கார்த்தியின் விருமன் படத்திற்கும் யுவன்தான் இசையமைத்துள்ளார்.
முத்தையா இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.
இதையும் படிங்க - ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை
அடுத்ததாக பொன்னியின் செல்வன் கார்த்தியின் நடிப்பில் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகவுள்ளது. இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.