ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Karthi: முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் கார்த்தி!

Karthi: முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் கார்த்தி!

கார்த்தி

கார்த்தி

COVID-19 தடுப்பூசி இயக்கம் தொடர்கையில், அதிகமான பிரபலங்கள் முன்வந்து தடுப்பூசி போடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் கார்த்தி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் தவணையினை செலுத்திக் கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-ம் அலை வேகமெடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அந்ததந்த மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துதலை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் கொரோனாவை எதிர்க்க நம்மிடம் இருக்கும் பேராயுதம் தடுப்பூசி தான். அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது COVID-19 தடுப்பூசி இயக்கம் தொடர்கையில், அதிகமான பிரபலங்கள் முன்வந்து தடுப்பூசி போடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். அவர்களில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்தி தனது முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அவர், இன்று தான் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, கார்த்தி தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் சர்தார், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகியப் படங்களை கைவசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Karthi