Home /News /entertainment /

2 வருடம் கழித்து குழந்தைகளுக்காக இது... கார்த்தி பகிர்ந்த க்யூட் படம்!

2 வருடம் கழித்து குழந்தைகளுக்காக இது... கார்த்தி பகிர்ந்த க்யூட் படம்!

கார்த்தி

கார்த்தி

தற்போது தனது மகள் மற்றும் மகனுடன் ஏற்காடு சுற்றுலா சென்றுள்ள கார்த்தி அங்கு எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    நடிகர் கார்த்தி தனது மகள் மற்றும் மகனுடன் சுற்றுலா சென்றுள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் கார்த்தி தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் 2022-ம் ஆண்டின் மத்தியில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து சர்தார், விருமன் ஆகியப் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தனது மகள் மற்றும் மகனுடன் ஏற்காடு சுற்றுலா சென்றுள்ள கார்த்தி அங்கு எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Karthi Sivakumar (@karthi_offl)






    மேலும் படிக்க - நடிகை மீனாவின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா 

    அதில், “குழந்தைகளுக்கான முதல் சுற்றுலா (கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு), இயற்கையின் அழகுக்கு மத்தியில் எங்கள் குடும்ப விடுமுறையை மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் மாற்றியமைக்கு நன்றி shambala yercaud. திரு.ரவி மற்றும் பணியாளர்கள், குழந்தைகளுக்கான அனைத்தையும் திட்டமிட்டு செய்துக் கொடுத்த செஃப் பிரிஜ் பூஷன் அனைவருக்கும் நன்றி. நாங்கள் அனைவரும் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி