அதிமுக கூட்டணி கட்சித் தலைவருக்கு ஆதரவாக பிரசாரமா? - கார்த்தி விளக்கம்

news18
Updated: March 25, 2019, 6:28 PM IST
அதிமுக கூட்டணி கட்சித் தலைவருக்கு ஆதரவாக பிரசாரமா? - கார்த்தி விளக்கம்
நடிகர் கார்த்தி
news18
Updated: March 25, 2019, 6:28 PM IST
அதிமுக கூட்டணிக் கட்சித்தலைவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டது குறித்த விவகாரத்துக்கு விளக்கமளித்துள்ளார் நடிகர் கார்த்தி.

புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நமக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்துகொண்டு அதற்கும் மேலாக உதவி செய்யக்கூடியவர். மருத்துவ உதவியாக இருக்கட்டும், பென்சனுக்கு தேவையான தொகையாக இருக்கட்டும், நாங்கள் கட்டடம் கட்டும் போது அதற்குத் தேவையான அறிவுரைகளாகட்டும் நாம கேட்பதற்கும் மீறி உதவி செய்யக்கூடியவர். எங்களுக்கு நல்ல நண்பராக, நலம் விரும்பியாக இருப்பவர் ஏ.சி.சண்முகம்

எம்.ஜி. ஆரின் வழியில் வந்ததாலேயே பொதுத்தொண்டு அவருடன் இயல்பிலேயே இருக்கிறது. இவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தை நடத்துகிறார்.

ஒரு சாதாரண ஆளாக ஆரம்பித்து தற்போது பெரிய சாம்ராஜ்யமாக மாற்றியிருக்கிறார். நிறைய பேருக்கு உதவிகள் செய்கிறார். முக்கியமாக சினிமாவில் இருக்கும் பல தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுக்கிறார். அவரது பொதுப்பணி தொடர வேண்டும். அவர் எந்தக்காரியத்தை செய்தாலும் அது வெற்றியடைய வேண்டுமென நான் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார் நடிகர் கார்த்தி.

இந்த வீடியோவை ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் நடிகர் கார்த்தி, ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார் என்ற தோற்றம் உருவானது.

இந்தநிலையில் இந்த வீடியோ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் கார்த்தி, “தேர்தலில் நான் பிரசாரம் செய்வது போன்ற வீடியோ குறித்து எனக்கு நிறைய போன் வந்தது. அதுமுற்றிலும் தவறான தகவல். தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே என்னுடைய பங்கு” என்று கூறியுள்ளார்.
Loading...Video: ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் - கமல் பாராட்டு 

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...