Home /News /entertainment /

‘விருமன் திரைப்படத்தின் டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளார்’ – நியூஸ் 18-க்கு நடிகர் கார்த்தி பேட்டி

‘விருமன் திரைப்படத்தின் டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளார்’ – நியூஸ் 18-க்கு நடிகர் கார்த்தி பேட்டி

விருமன் படத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர்.

விருமன் படத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா ஏற்கனவே பருத்திவீரன் போன்ற படங்களில் பாடியுள்ளார். விருமன் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் பட குழுவினர் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் நாயகி அதிதி ஷங்கர் ஆகியோர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர்.

    அதில் பேசிய நடிகர் கார்த்தி,  தற்போதைய சூழலில் அத்தை - மாமா போன்ற உறவுகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டிருக்கிறது.  அதுபோன்ற உணர்வுகளை சொல்வதில் இயக்குநர் முத்தையா உறுதியாக உள்ளார் என தெரிவித்தார்.

    அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

    அதேபோல் படம் ரசிகர்களை Entertain செய்ய வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள். அதை விருமன் திரைப்படம் செய்யும் என தெரிவித்தார். இந்தப் படத்தின் பாடல் குறித்து பேசிய நடிகர் கார்த்தி,  டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளார் என கூறியுள்ளார்.

    மாதவனின் ராக்கெட்ரி – நம்பி விளைவு படத்திற்கு சீமான் பாராட்டு…

    யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா ஏற்கனவே பருத்திவீரன் போன்ற படங்களில் பாடியுள்ளார். இந்த நிலையில் கார்த்தி - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திலும் டைட்டில் பாடலை அவர் பாடியுள்ளார். இது படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என படக் குழுவினர் நம்புகின்றனர்.

    விருமன் ட்ரெய்லரைப் பார்க்க...



    அதேபோல் அதிதி,  பேசுகையில் நடிப்பது குறித்து கூறியபோது தந்தை மற்றும் தாய் ஆகியோர் விவாதித்து முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். அத்துடன் விருமன் இந்த திரைப்படத்திற்காக பயிற்சி எடுத்து நடித்ததாகவும் தெரிவித்தார். மேலும் மதுரை மக்கள் மிகப்பெரிய அளவில் அன்பு செலுத்தினர் எனவும் பெருமிதம் அடைந்தார் அதிதி ஷங்கர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி