ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சமூக விழிப்புணர்வுக்காக கைகோர்த்த கார்த்தி - ஷாம்லி!

சமூக விழிப்புணர்வுக்காக கைகோர்த்த கார்த்தி - ஷாம்லி!

ஷாம்லி - கார்த்தி

ஷாம்லி - கார்த்தி

அதை ஒரு கலைப்பொருளாக மாற்றியதற்காக ஷாம்லிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபலங்கள் பலர் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர உதவும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நடிகர் கார்த்தியும், நடிகை ஷாம்லியும் கழிவு மேலாண்மைக்காக ஒன்றாக இணைந்துள்ளதாக தெரிகிறது.

  இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கழிவு மேலாண்மையில் தங்கள் பங்கை ஆற்றவும், தனக்கு பத்து வயதாக இருக்கும்போது, தனது அம்மா பரிசளித்த கிடாரை நன்கொடையாக அளித்துள்ளார் கார்த்தி. அதில் ஓவியம் வரைந்துள்ளார் ஷாம்லி.

  சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்த கார்த்தி, "சிறுவயதில் எனக்கு என் அண்ணனின் சைக்கிள் கிடைத்தது, நான் பயன்படுத்திய பிறகு அது என் சகோதரிக்கு வழங்கப்பட்டது. அதனால் நாங்கள் எப்போதும் எதையும் கழிவு எனக் கருதி தூக்கி வீசியதில்லை. நான் என் பங்கிற்கு ஏதாவது செய்ய முடிவு செய்தபோது, ​நான் பத்து வயதாக இருந்தபோது அம்மா எனக்கு பரிசளித்த கிடார் நினைவுக்கு வந்தது. நான் அப்போது தான் கிட்டார் கற்க ஆரம்பித்தேன், ஆனால் அதன் பிறகு டச் விட்டு போனது. ஆனால் நான் எப்போதும் அந்த கிடாரை என்னுடன் வைத்திருந்தேன். இப்போது அதை ஒரு கலைப்பொருளாக மாற்றியதற்காக ஷாம்லிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் நிறைய நேரம் செலவழித்து அதை ஒரு அழகான கலைப்பொருளாக மாற்றியுள்ளார்" என்றார்.

  இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தைப் பகிர்ந்த சின்மயி!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையில், பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'சர்தார்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் தயாரித்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Karthi