Home /News /entertainment /

மதுரையில் நடைபெறும் விருமன் படத்தின் ட்ரெய்லர் – ஆடியோ வெளியீட்டு விழா…

மதுரையில் நடைபெறும் விருமன் படத்தின் ட்ரெய்லர் – ஆடியோ வெளியீட்டு விழா…

விருமன் படத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர்.

விருமன் படத்தில் கார்த்தி - அதிதி ஷங்கர்.

விருமன் படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோர் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    கார்த்தி – அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் சென்னையில் நடத்தப்படும்  நிலையில் படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

    விருமன் படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோர் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.



    பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்…

    முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விருமன் படத்திலிருந்து முதல் பாடலாக கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடல் 30 மில்லியன் பார்வையை கடந்திருக்கிறது.



    இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நாளை மறுதினமான 3ம் தேதி நடைபெறும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    மகள் அதிதி அறிமுகம் ஆகும் விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்கிறார். படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா மற்றும் திரை பிரபலங்கள் விருமன் பட விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    ஆந்திராவில் சினிமா துறையினர் வேலை நிறுத்தம்… விஜய்யின் வாரிசு படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

    கார்த்தி – முத்தையா காம்போவில் முன்பு வெளியான கொம்பன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் விருமனும் ரசிகர்கள் உள்ளத்தை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

    விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி