ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

1000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாகும் ஆளவந்தான்… எதிர்பார்ப்பில் கமல் ரசிகர்கள்…

1000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாகும் ஆளவந்தான்… எதிர்பார்ப்பில் கமல் ரசிகர்கள்…

ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன்

ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன்

ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான பாபா திரைப்படம் கடந்த மாதம் அவரது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கமல் நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆளவந்தான் திரைப்படம், மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த முறை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ஆளவந்தான் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் மெகா ஹிட் படங்களான பாட்ஷா, அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், கமல், மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆளவந்தான் திரைப்படம் 2001 இல் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சங்கர் மகாதேவன் இசையமைத்திருந்தார்.

ஆளவந்தான் படத்தில் நந்தகுமார் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபராகவும், மேஜர் விஜயகுமார் என்ற ராணுவ அதிகாரியாகவும் இரண்டு வேடங்களில் கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டியிருப்பார். 22 ஆண்டுகளுக்கு முன்பு 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நந்தகுமார் என்ற நந்து கேரக்டரில் நடித்த கமல்ஹாசனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. சண்டைக் காட்சிகள் அதிக கவனம் பெற்றன. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இந்நிலையில் ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் ரீரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. ஒளி மற்றும் காட்சி அமைப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் ஆளவந்தான் திரைப்படம் மாஸ்டரிங் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று கவனம் பெற்று வருகிறது. இதில் படத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு திரை கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான பாபா திரைப்படம் கடந்த மாதம் அவரது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டது. இந்த படத்தைதையும், ஆளவந்தான் படத்தையும் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kamal Haasan