அரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் சினிமா எடுப்போம் - கமல்ஹாசன்

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

news18
Updated: July 3, 2019, 8:57 PM IST
அரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் சினிமா எடுப்போம் - கமல்ஹாசன்
கமல்ஹாசன்
news18
Updated: July 3, 2019, 8:57 PM IST
அரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் சினிமா எடுப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் கடாரம் கொண்டான் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ்-ல் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் கமல்ஹாசன், விக்ரம், அக்‌ஷராஹாசன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜூலை 19-ம் தேதி கடராம் கொண்டான் திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நல்ல சினிமாவையும், தமிழ் சினிமாவையும் உலக தரத்திற்கு கொண்டு போகும் முயற்சியிலேயே நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன். கடாரம் கொண்டான் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும், என் படம் என்பதற்காக சொல்லவில்லை. விக்ரம்-ன் ஸ்டைலுக்காகவே இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சீயான் விக்ரமை நியாபகம் வைத்துகொண்டது போல கடாரம் கொண்டான் படத்தையும் நியாபகம் வைத்துக்கொள்வார்கள். ஒரு அரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் சினிமா எடுப்போம். தமிழ் சினிமா வெறும் வியாபாரம் மட்டும் அல்ல, அது ஒரு கலாச்சார தடயம்’ என்று பேசினார்.


First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...