Home /News /entertainment /

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் புஷ்பா படம் பார்த்த கமல்ஹாசன்... படக்குழுவுக்கு பாராட்டு

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் புஷ்பா படம் பார்த்த கமல்ஹாசன்... படக்குழுவுக்கு பாராட்டு

புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் முக்கிய பங்கை வகித்துள்ளார். அல்லு அர்ஜுனின் மாஸ் சீன்கள், காதல் காட்சிகள், வில்லன்கள் இடம்பெறும் சீன்கள் என ஒவ்வொரு காட்சிக்கு மிரட்டலான பின்னணி இசையமைத்து புஷ்பாவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் உலகநாயகன் கமல்ஹாசன் புஷ்பா படம் பார்த்ததுடன், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் வசூலை குவித்துள்ளது.

    நட்சத்திரங்கள் பலரும் இந்தப் படத்தை பார்த்து விட்டு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் சேர்ந்து புஷ்பா படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கண்டு ரசித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் வசூலை அள்ளி புஷ்பா, தற்போது அமேசான் ஓடிடி தளத்திலும் அதிக முறை பார்க்கப்பட்டு வருகிறது.

    Also Read : சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை சினிமா பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்ட க்ளிக்ஸ்!

    புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் முக்கிய பங்கை வகித்துள்ளார். அல்லு அர்ஜுனின் மாஸ் சீன்கள், காதல் காட்சிகள், வில்லன்கள் இடம்பெறும் சீன்கள் என ஒவ்வொரு காட்சிக்கு மிரட்டலான பின்னணி இசையமைத்து புஷ்பாவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

    முதல்பாகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் படத்தின் முன்னோட்ட காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தன.

    Also Read : bigg boss 5 finale : இன்று பிரம்மாண்டமான பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

    விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம் என்பதால், கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஃபகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வில்லன் கேரக்டரில் நடிக்கின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி