முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கமல்ஹாசன்

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கமல்ஹாசன்

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா தொற்றிலிருந்து நடிகர் கமல்ஹாசன் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அண்மையில் ஹவுஸ் ஆஃப் கத்தர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அமெரிக்கா சென்றிருந்தார். சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு சளி, இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீடியோவில் தோன்றி, தான் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து உள்ளதாகவும் இரண்டு நாட்கள் மட்டும் அவர் தனிமைப்படுத்தி கொண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் அவரது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

First published:

Tags: Kamalhaasan