Home /News /entertainment /

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு!!

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு!!

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்

Kamal in UAE : கமல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது சினிமா குறித்தும் புதிய ஊடகங்கள் தொடர்பாகவும் இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்த நிலையிலும், இந்த படத்திற்கான வரவேற்பு குறையாமல் காணப்படுகிறது.

    உலக அளவில் ரூ. 400 கோடியை விக்ரம் பட வசூல் எட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ்நாட்டில் விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி வெளியிட்டிருந்தார்.

    இதையும் படிங்க - ஷாரூக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

    விக்ரம் படத்தில் கமல் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தோற்றத்தில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யா திரையரங்கை அதிர வைத்தார். அடுத்ததாக விக்ரம் படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கமல் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதை முடித்துக்கொண்டு விக்ரம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சங்கர் சங்கர் இயக்க, லைகா பிலிம்ஸ் தயாரிக்கிறது.



    தளபதி 67 படத்தை முடித்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கான பணிகளில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க - பட்டித்தொட்டி எட்டும் விஜயின் ரசிகர் படை..

    இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நயான் பின் முபாரக்கை கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின்போது சினிமா குறித்தும் சர்வதேச திரைப்படங்கள் குறித்தும் இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    மேலும் சமூக ஊடகங்கள் புதிதாக தடம் பதிக்கும் ஊடகங்கள் குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது இந்த சந்திப்பு ஒரு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kamalhaasan, Vikram

    அடுத்த செய்தி