ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவாஜியாக மாறிய கமல்.. அசத்திய அக்‌ஷரா.. 'தேவர் மகன்' போஸ் கொடுத்த அப்பா -மகள்! தீபாவளி ஸ்பெஷல்!

சிவாஜியாக மாறிய கமல்.. அசத்திய அக்‌ஷரா.. 'தேவர் மகன்' போஸ் கொடுத்த அப்பா -மகள்! தீபாவளி ஸ்பெஷல்!

கமல்

கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசனுடன் தீபாவளி கொண்டாடினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தும் மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட் ஸ்டார்களுடன் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி தங்களுடைய சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசனுடன் தீபாவளி கொண்டாடினார்.

  Also read... பெண் குழந்தைக்கு அப்பாவான யோகி பாபு.. தீபாவளி தினத்தன்று வீட்டில் விசேஷம்!

  பட்டு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கமல் அணிந்திருக்க, பாவாடை தாவணியில் அக்‌ஷரா ஹாசன் இருந்தார். குறிப்பாக இருவரும் தேவர் மகனின் புகழ்பெற்ற ஸ்டில்லை நினைவுப்படுத்துவதுபோல போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவர் மகனில் நாற்காலியில் சிவாஜி அமந்திருக்க, கைகளை கட்டியபடி கமல் நிற்பார். அப்படியான ஒரு ஸ்டில்லை தற்போது கமலும், அக்‌ஷராவும் உருவாக்கியுள்ளனர். சிவாஜி இடத்தில் கமலும், கமல் இடத்தில் அக்‌ஷராவும் மறு உருவாக்கம் செய்துள்ளனர். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் தேவர் மகனை நினைவுப்படுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர்

  நடிகர் ரஜினிகாந்த் தன் பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை இன்று கொண்டாடினார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இடுகிறார்.

  அவர்களின் பின்னால் வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்றுகொண்டு பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Deepavali, Kamal Haasan