Home /News /entertainment /

விக்ரம் படத்திலிருந்து முதல் பாடல் இன்று ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்ரம் படத்திலிருந்து முதல் பாடல் இன்று ரிலீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

ஜூன் 15-ம்தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

கமலின் விக்ரம் படம் குறித்த புதிய போஸ்டரால் ரசிகர்கள் துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளனர். இன்றிரவு 7 மணிக்கு விக்ரம் படத்திலிருந்து முதல் சிங்கிள், கமல் குரலில் அனிருத் இசையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் நடிக்கும் விக்ரம் படத்தை அவரது தீவிர ரசிகரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் மிரட்டக் கூடியவர் என்பதால் லோகேஷ் + கமலின் கூட்டணியின் விக்ரம் படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

லோகேஷ், கமலை தவிர்த்து அனிருத், கே.ஜி.எஃப். ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு, பகத் பாசில், விஜய் சேதுபதி என தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க - 'இந்தி சினிமாவில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' - தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பேட்டி!!

விக்ரம் படத்திலிருந்து டைட்டில் டீசர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 15-ம்தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.



முதற்கட்டமாக கமலின் வரி மற்றும் குரலில் இன்றிரவு 7 மணிக்கு படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக அட்டகாசமான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படியொரு கமலைப் பார்க்கத்தான் காத்திருந்தோம் என்பதைக் கூறும் வகையில், போஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.







லோகேஷ், கமல், அனிருத் கூட்டணியின் முதல்பாடலை கேட்க கோலிவுட்டே காத்திருக்கிறது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan

அடுத்த செய்தி