விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் தொடர்பான கேள்விக்கு, கமல் விளக்கம் அளித்துள்ளார். இதிலிருந்து விக்ரம் படத்தின் 3வது பாகம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
1986-ல் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. ராஜசேகர் இயக்கிய இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.
இதன்பின்னர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் கமல் நடிப்பில் அதே பெயரில் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கவுரவ தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார். படத்தில் கமலின் மகன் அவர்தான் என்றும், அவர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையும் படிங்க - ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை
இந்நிலையில் சூர்யாவின் கேரக்டர் குறித்த கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
படத்தில் கடைசி நிமிடங்களில் சூர்யா இடம்பெறுகிறார். அவரது கேரக்டர், படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அது விக்ரம் 3வது பாகமாகக் கூட இருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் கடந்த 15-ம்தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லரும் அதே நாளில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க - சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21 படத்தின் மாஸான டைட்டில் இது தான்!
விக்ரம் படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரன் மேற்கொள்ள பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களில் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ், விக்ரம் படத்தில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
ஜூன் 3-ம்தேதி விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya, Kamal Haasan