Home /News /entertainment /

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல்… விரைவில் வீடியோ வெளியாகிறது

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல்… விரைவில் வீடியோ வெளியாகிறது

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு 16.5 மில்லியன் சந்தாதாரர்கள் யூடியூபில் உள்ளனர்.

பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் கமல் பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ விரைவில் வெளிவரவுள்ளது.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கவுரவ தோற்றத்தில் சூர்யா படத்தில் இடம்பெற்றுள்ளார்.

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பத்தல பத்தல என்ற முதல் பாடலும் ரசிகர்களிடம் நன்றாக ரீச் ஆனதால், தமிழ் சினிமா ரசிகர்கள் ஜூன் 3ம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிங்க - கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்

இந்நிலையில் படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் விதமாக வில்லேஜ் குக்கிங் என்ற பிரபல யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கமல் பங்கேற்றுள்ளார். இந்த யூடியூப் சேனலை சேர்ந்த சமையல் கலைஞர்கள், விக்ரம் படத்தில் கல்யாண் காட்சி ஒன்றில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு 16.5 மில்லியன் சந்தாதாரர்கள் யூடியூபில் உள்ளனர். ஏற்கனவே விக்ரம் படம் நன்றாக ரீச் ஆகியுள்ள நிலையில், கமல் பங்கேற்கும் நிகழ்ச்சி கூடுதல் வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - விக்ரம் ட்ரெய்லரில் மிஸ் ஆனாரா சூர்யா? அப்போ இந்த கேரக்டர் யார்?

இதற்கிடையே, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட விக்ரம் படத்தின் ட்ரெய்லர், 17 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான கேரக்டரில் கமல் நடித்திருப்பதை பார்த்து, ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மல்டி ஹீரோக்கள் இணைந்திருப்பதால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வர்த்தக ரீதியில், விக்ரம் படம் புதிய உச்சத்தை தொடும் என சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan

அடுத்த செய்தி