மனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசனும் கூறினார்: தாடி பாலாஜி

தாடி பாலாஜி

காமெடி நடிகர் தாடி பாலாஜி, மீண்டும் தன் மனைவி மீதும் போலீசார் மீதும் குற்றம்சாட்டியுள்ளார். தனது மனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பாலாஜி.

 • Share this:
  நடிகர் பாலாஜி, திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்த பாலாஜி, சமீபத்தில் பிக்பாஸ் தொடரில் மனைவி நித்யாவுடன் இணைந்து பங்கேற்று வாழ்க்கையிலும் ஒன்று சேரப் போவதாக அறிவித்திருந்தார்.

  இந்த நிலையில், தனது மனைவி மீது மீண்டும் சரமாரி குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார் பாலாஜி. உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் பசில் ஆகியோரின் கட்டுப்பாட்டில் தனது மனைவி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  என்ன நடக்கிறது பாலாஜி வாழ்க்கையில்?

  நடிகர் பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். இருவரது வாழ்க்கையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து புயல் வீசத் தொடங்கியது. பொதுவெளியில் இருவரும் சரமாரியாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

  சிலகாலம் பிரிந்து வாழ்ந்த அவர்களை பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடர் இணைத்து வைத்தது. அந்தத் தொடரில் நடிகர் பாலாஜியுடன், நித்யாவும் பங்கேற்றார். தொடரின் இறுதியில் இருவரும் வாழ்க்கையில் இணையப் போவதாகவும் அறிவித்திருந்தனர்

  இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி நித்யா மாதவரம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதில் பாலாஜி குடித்து விட்டு தன்னையும் தனது மகளையும் தாக்குவதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கடந்த 24-ஆம் தேதி காவல்நிலையத்தில் ஆஜாரானார் பாலாஜி.

  இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பாலாஜி, தன் மனைவி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார். தனது நண்பனும் சிந்தாதிரிப் பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவருமான மனோஜ்குமார் மற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் பசில் ஆகியோரின் கட்டுப்பாட்டில் தனது மனைவி இருப்பதாக பாலாஜி கூறினார்.

  உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தனது குழந்தை போஷிகாவிடம் தேவையில்லாததைக் கூறி அதை தன்னிடம் சொல்லும்படி ஏவிவிடுவதாகவும் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மனோஜ்குமார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

  உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் தனது மனைவி நித்யா ஆகியோரால் தனது குழந்தை போஷிகாவிற்கு ஆபத்து உள்ளதாக பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் கமலும் இதை தன்னிடம் கூறியுள்ளதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.

  பிக்பாஸ் தொடரில் தன்னுடன் வாழ்க்கையில் இணையப் போவதாக நித்யா கூறியது நடிப்பு என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

  இதுகுறித்து உதவி ஆய்வாளர் மனோஜ்குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, பாலாஜியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். பாலாஜியின் குடும்பப் பிரச்னையில் உதவி செய்வதற்காகச் சென்றதாகவும், ஆனால் அவர் தொடர்ந்து அவதுாறு பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார். பாலாஜியின் மனைவி நித்யாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

  படிக்க...கொரோனா நெகட்டிவ் - நாளை சென்னை வருகிறார் தோனி

  அதேநேரம் தான் அளித்துள்ள புகார்கள் தொடர்பாக போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகர் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: