Home /News /entertainment /

விக்ரம் ஸ்டைலில் அடுத்த படத்திற்கு தயாராகும் கமல்… மீண்டும் வசூல் வேட்டைக்கு திட்டம்

விக்ரம் ஸ்டைலில் அடுத்த படத்திற்கு தயாராகும் கமல்… மீண்டும் வசூல் வேட்டைக்கு திட்டம்

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

Kamal next Movie : கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது புகைப்படங்களுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்தது.

    நடிகர் கமல் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் விக்ரம் பட ஸ்டைலில் மல்டி ஸ்டார்களைக் கொண்ட படமாக இது உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத்பாசில்,சூர்யா நடிப்பில் விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த திரைப்படம் 5 வாரத்திற்குள் அடியெடுத்து வைக்க உள்ளது.

    விறுவிறுப்பான திரைக்கதை, மிரட்டலான பின்னணி இசை உள்ளிட்டவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

    இதையும் படிங்க - முதன்மை கதாப்பாத்திரத்தில் அம்மு அபிராமி நடிக்கும் 'குதூகலம்' 

    இவை அனைத்தையும் விட மல்டி ஸ்டார் என்ற ஃபார்முலா படத்தின் வெற்றிக்கு முதன்மை காரணமாக அமைந்தது. கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது புகைப்படங்களுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்தது.

    அத்துடன் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குவதால் ரசிகர்கள் இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்தனர். அதற்கேற்ற வகையில் படமும் சிறப்பாக அமைந்ததால், ரூ. 400 கோடிக்கும் அதிகமாக படம் வசூலை கலெக்சன் செய்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்த படத்திற்கு கமல் தற்போது தயாராகி வருகிறார். இந்த படத்திலும் விக்ரமைப் போலவே மல்டி ஸ்டார் ஃபார்முலாவை கமல் கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

    இதையும் படிங்க - வைரலாகும் விக்கி – நயன்தாரா ஹனிமூன் ஃபோட்டோஸ்… 

    இவர் ஏற்கனவே மலையாளத்தில் வெளிவந்த பகத் பாசில் நடித்த மாலிக் என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர். கமல் படத்தில் நடிப்பதற்காக தற்போது மலையாள நட்சத்திரம் மம்மூட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவரும் கமலுடன் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனவே கமல், மம்மூட்டி ரசிகர்கள் ஒரு சூப்பரான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kamalhaasan

    அடுத்த செய்தி