உடல் பரிசோதனையை தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
விக்ரம் படத்தில் நடித்து வரும் நடிகர் கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக பெரிய திரையைப் போலவே சின்னத்திரையிலும் கமலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பெருகியுள்ளனர்.
சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டிருந்தார். அப்போது கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருந்தார்.
கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்ததும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மற்றும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Also Read :
ஷங்கர் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமை ரூ.200 கோடிகளுக்கு விற்பனை?
இதில் உடல் நலம் ஆரோக்கியமாக உள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று அவர் வீடு திரும்பியுள்ளார்.
கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை படத்திலிருந்து ஒரேயொரு முன்னோட்டம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக விக்ரம் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் அதனை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மாஸ்டர் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Also Read :
'ஜீ தமிழ்' தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? – பாஜக அரசுக்கு சீமான் கண்டனம்
இதனால் விக்ரம் படத்தின் சுவாரசியம் பன்மடங்கு கூடியுள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் பகத் பாசில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருப்பார். கமலுக்கு அவர் விக்ரம் படத்தில் கடும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.