முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தியன் 2 படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறார் கமல்ஹாசன்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறார் கமல்ஹாசன்!

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறார் நடிகர் கமல்ஹாசன்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இன்று முதல் கலந்து கொள்கிறார். 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பின் சமூக உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. அதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகளை படமாக்கினார்கள்.

மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கருக்கு உதவியாக அவரின் முன்னாள் உதவியாளர்களும்,  இயக்குனர்களுமான வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோர் சில காட்சிகளை இயக்குகின்றனர்.

அவர்களுக்கான காட்சிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.  அதேபோல் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை ஷங்கர் இயக்குகிறார்.  கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்ததால், இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

Also read... 44 வருடங்களுக்கு முன் கைத்தட்டல் வாங்கிய ரஜினியின் ப்ளேபாய் நடிப்பு

இந்த நிலையில் சென்னை திரும்பிய கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இதையடுத்து இன்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.  அதற்கான புகைப்படத்தை சமூக வலைதளங்களில்  கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director Shankar, Indian 2, Kamal Haasan