தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவதே இலக்கு என்று கூறினார். மேலும் மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்றும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் உதயநிதி தெரிவித்தார்.
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 14, 2022
இதனிடையே அவருக்கு பல்வேறு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ''வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன் . எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மேடையிலே அப்பா காலில் விழுந்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்!
முன்னதாக 'மாமன்னன்' படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக உதயநிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.