முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''கலை மரபணுவில் வாழும் குரு'' - நாகேஷ் குறித்து கமல்ஹாசன் உருக்கம்!

''கலை மரபணுவில் வாழும் குரு'' - நாகேஷ் குறித்து கமல்ஹாசன் உருக்கம்!

நாகேஷ் - கமல் ஹாசன்

நாகேஷ் - கமல் ஹாசன்

1933-ல் தாராபுரத்தில் பிறந்த நாகேஷ், கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ரயில்வே துறையில் பணியாற்றினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் நாகேஷ் குறித்த இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் நடிகர் கமல் ஹாசன்.  தமிழ் திரையுலக வரலாற்றில் தடம் பதித்த மாபெரும் கலைஞன் நாகேஷின் நினைவு தினம் இன்று. மறைந்த நாகேஷின் 14-வது நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் அவரை நினைவு கூர்ந்துள்ளார். கமல்ஹாசன் எப்போதுமே நாகேஷைப் பற்றியும் அவரது அசாத்தியமான நடிப்புத் திறமையைப் பற்றியும் உயர்வாகப் பேசுவார். அவர்கள் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று 'மைக்கேல் மதன காம ராஜன்'.

”மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்” என்று கமல் ஹாசன் மறைந்த நடிகர் நாகேஷ் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1933-ல் தாராபுரத்தில் பிறந்த நாகேஷ், கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ரயில்வே துறையில் பணியாற்றினார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர், மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1959-ல் 'தாமரைக்குளம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இளம் ஆர்வமுள்ள திரைப்பட இயக்குனராக நடித்து புகழ் பெற்றார். நகைச்சுவையில் டைமிங்கில் கவுண்டர் கொடுப்பதில் மாஸ்டர். அதோடு நாகேஷ் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் கூட. இவர் நகைச்சுவை மன்னன் என்றும் ‘இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்’ என்றும் குறிப்பிடப்படுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan