விபத்து நடந்த இடத்தில் மீண்டும் இந்தியன் - 2 படப்பிடிப்பு? கமல் விளக்கம்

விபத்து நடந்த இடத்தில் மீண்டும் இந்தியன் - 2 படப்பிடிப்பு? கமல் விளக்கம்
நடிகர் கமல்ஹாசன்
  • Share this:
இந்தியன்-2 படப்பிடிப்பை விபத்து நடந்த அதே இடத்தில் மீண்டும் நடத்துவது குறித்து இயக்குனர் ஷங்கர் முடிவு செய்வார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் சென்னையை அடுத்த ஈவிபியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

அந்த குடும்பத்தினருக்கு படத்தின் தயாரிப்பாளர், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் 4 கோடி ரூபாய் நிவாரண தொகையாக அவர்களது குடும்பத்தினருக்கு சென்னையில் இன்று வழங்கினர்.


பின்னர் செய்தியாளர் பேசிய கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு எத்தனை அணி உருவானாலும் திரைத்துறைக்கு இறங்கி பணியாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்று கூறினார்.

Also see... தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷின் நியூ போட்டோஸ்

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து கசப்பான அனுபவம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் தவிர்ப்பது பற்றியும் வெளிநாடுகளில் பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பு நடைபெறுவது குறித்து இயக்குனர் சங்கர் தான் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading