ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'பொங்கல் வருது எச்சரிக்கை' - ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஹிந்தியிலேயே நக்கல் பதிவிட்ட கமல்

'பொங்கல் வருது எச்சரிக்கை' - ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஹிந்தியிலேயே நக்கல் பதிவிட்ட கமல்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்தி திணிப்புக்கு எதிராக கமல்ஹாசன் நக்கலாக ட்வீட் செய்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கேரளாவின் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் தேசிய கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்துவிடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா எனறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழியர்களின் 'துணிவு'க்காக வாழ்த்து சொன்ன மின்சாரத் துறை - 'இது நியாயமா?' என கொதிக்கும் விஜய் ரசிகர்கள்

அவருக்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது , தாய்மொழி எமது பிறப்புரிமை.பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல்.வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும்.ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்.திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும்.

இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: BJP, Hindi, Kamal Haasan