ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீமானுக்கு கமலின் வாழ்த்துகளும், கருணாநிதியின் விமர்சனமும்!

சீமானுக்கு கமலின் வாழ்த்துகளும், கருணாநிதியின் விமர்சனமும்!

கமல் மற்றும் சீமான்

கமல் மற்றும் சீமான்

இணையத்தில் எழுதுகிறவர்களில் எழுத்துப்பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இல்லாமல் முடிந்தவரை இலக்கணத்தையொட்டி எழுதுகிறவர் கமல்ஹாசன். தனது பதிவுகளில் அத்தனை கவனம் எடுத்துக் கொள்கிறவர். அப்படியொரு சிறப்பான வாழ்த்துதான் இதுவும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'ஆற்றல் மிகு பேச்சாலும், அளப்பரிய தமிழுணர்வாலும் அனைவரையும் ஈர்க்கும் அன்புத் தம்பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.'

- என அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் எழுதுகிறவர்களில் எழுத்துப்பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இல்லாமல் முடிந்தவரை இலக்கணத்தையொட்டி எழுதுகிறவர் கமல்ஹாசன். தனது பதிவுகளில் அத்தனை கவனம் எடுத்துக் கொள்கிறவர். அப்படியொரு சிறப்பான வாழ்த்துதான் இதுவும். ஆனால், இதில் வரும் வாழ்த்துகளில் 'க்' சேர்த்துள்ளார். ஆனால், வாழ்த்துகளில் 'க்' சேர்த்து எழுதக் கூடாது. இது ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால், இந்த 'க்' சேர்த்த வாழ்த்திற்கும், சீமானுக்கும் தொடர்பு உண்டு.

Also read... லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

2008 பொங்கலையொட்டி சீமான் இயக்கிய வாழ்த்துகள் திரைப்படம் வெளியானது. மாதவன், பாவனா, விஜயலட்சுமி, மல்லிகா சுகுமாரன், இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் அறிவிப்பின் போது வாழ்த்துக்கள் என்று 'க்' சேர்த்து எழுதப்பட்டிருந்தது. அந்த நேரம் கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தார். சீமான் திமுக அனுதாபியாக இருந்தார். கருணாநிதியை சீமான் சந்தித்து, வாழ்த்துக்கள் படத்தைப் பற்றி கூற, அதன் டைட்டிலைப் பார்த்த கருணாநிதி, வாழ்த்துகளில் 'க்' வராது என்று சொல்ல, அதன் பிறகு வாழ்த்துகள் என்று 'க்' தவிர்த்து படத்தின் பெயரை மாற்றினார் சீமான்.

வாழ்த்துகள் படத்தின் போஸ்டர் முதற்கொண்டு அனைத்தும் அதன் பிறகு 'க்' சேர்க்காமல் வெளியானது. கமல்ஹாசன் சீமானுக்கு தெரிவித்திருக்கும் வாழ்த்துச் செய்தியை கருணாநிதி உயிரோடு இருந்து பாத்திருந்தால், வாழ்த்துகளில் 'க்' சேர்க்கக் கூடாது என்று கமலிடமும் கூறியிருப்பார்.

வாழ்த்துகள் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் ஒரு வரலாறே இருப்பது  ஆச்சரியம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kamal Haasan, Seeman