• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kaali Venkat: வித்தியாச டைட்டில் கொண்ட படத்தில் ஹீரோவாகும் காளி வெங்கட்!

Kaali Venkat: வித்தியாச டைட்டில் கொண்ட படத்தில் ஹீரோவாகும் காளி வெங்கட்!

காளி வெங்கட்

காளி வெங்கட்

கலகலப்பு, உதயம் என்ஹெச் 4, தெகிடி, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று, கொடி போன்ற படங்கள் காளி வெங்கட்டுக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தன.

  • Share this:
    நகைச்சுவை மற்றும் குணச்சிததிர வேடங்களில் நடித்துவரும் காளிவெங்கட் முதல்முறையாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். மாடு என்று இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    சினிமாவில் நடிக்கும் முன் குறும்படங்களில் காளி வெங்கட் நடித்து வந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இடம்பெற்ற, அவர் நடித்த குறும்படம் சிறந்த நடிகருக்கான விருதை இவருக்கு பெற்றுத் தந்தது. பிறகு சிறு சிறு வேடங்களில் சினிமாவில் தோன்றினார். தடையற தாக்க திரைப்படம் காளி வெங்கட்டை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கலகலப்பு, உதயம் என்ஹெச் 4, தெகிடி, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று, கொடி போன்ற படங்கள் காளி வெங்கட்டுக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தன. சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று, ஈஸ்வரன் படங்களிலும் நடித்திருந்தார். ரஞ்சித் இயக்கிவரும் சார்பட்டா பரம்பரையிலும் காளி வெங்கட் நடித்துள்ளார்.

    இந்நிலையில் மாடு என்ற படத்தில் காளி வெங்கட்டை நாயகனாக்கியுள்ளனர். பிரம்மா இந்தப் படத்தை இயக்குகிறார், ரித்விகா நாயகி. மெட்ராஸ் திரைப்படத்தில் ரித்விகாவின் கதாபாத்திரம் பேசப்பட்டது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியே அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பிக் பாஸ் டைட்டில் வென்ற பிறகும் அவர் விரும்பிய நாயகி வேடம் அமையவில்லை. இந்நிலையில் காளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    மாடு படம் குறித்து அதிக தகவல்களை இயக்குனர் பிரம்மா விரைவில் அறிவிக்க உள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: