முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்.. திரைப்பிரபலங்கள் இரங்கல்.!

சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்.. திரைப்பிரபலங்கள் இரங்கல்.!

ஜூடோ

ஜூடோ

ஜூடோ ரத்தினம் தலைநகரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gudiyatham, India

பிரபல சண்டைப் பயிற்சிக் கலைஞரும், நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பால் காலமானார். அவரது மறைவிற்கு திரைத் துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜூடோரத்தினம் வயது மூப்பு காரணமாக குடியாத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள சண்டை பயிற்சியாளர்களின் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரது உடல் குடியாத்தத்தில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு, மீண்டும் இறுதி அஞ்சலிக்காக இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

95 வயதான ஜூடோ ரத்தினத்திற்கு மூன்று மகன்களும் ஐந்து மகள்களும் உள்ளனர் அதேபோல் 17 பேரக் குழந்தைகள் உள்ளனர். அவரின் உடல் இன்று பகல் 12 மணி வரை சண்டை பயிற்சியாளர்களின் சங்கத்தில் வைக்கப்பட்டு அதன் பிறகு குடியாத்தம் எடுத்து செல்லப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இவர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார். தலைநகரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dead, Tamil Cinema, Tamil cinema news