Home /News /entertainment /

ஜீவா நடிக்கும் புதிய படம் வரலாறு முக்கியம்!

ஜீவா நடிக்கும் புதிய படம் வரலாறு முக்கியம்!

ஜீவா

ஜீவா

இந்தப் படம் ரொமான்டிக் காமெடியாக தயாராகியுள்ளது. படம் வெற்றி பெற்றால் சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தொடர்ந்து தமிழில் படம் தயாரிக்க வாய்ப்புள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் 2020-ல் அறிவிக்கப்பட்ட படத்தின் டைட்டிலை இன்று அறிவித்துள்ளனர்.

ஜீவாவின் தந்தை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் சௌத்ரி தமிழ் இன்டஸ்ட்ரிக்கு அதிகமான இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர். முன்பு இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் நுழைவதற்கான தலைவாசலாக அவரது அலுவலகம் இருந்தது. சினிமா வர்த்தகம் சூதாட்டம் ஆன பிறகு தமிழில் படம் தயாரிப்பதை குறைத்தவர், ஒரு கட்டத்தில் சுத்தமாக தமிழ்ப்பட தயாரிப்பிலிருந்தே விலகினார். அவரது நிறுவனம் 2020-ல் ஜீவா நடிப்பில் ஒரு படத்தை அறிவித்தது.

பெயரிடப்படாத அந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்குவதாகவும் நாயகிகளாக காஷ்மிரா பர்தேஷி, பிரகயா நக்ரா நடிப்பதாகவும் செல்லப்பட்டது கொரோனா பெருந்தொற்றிற்கு நடுவிலும் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். சென்னை, கோவை, கேரளா, ஹைதராபாத் என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியதாக படக்குழு தெரிவிக்கிறது. இன்று ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை பர்ஸ்ட் லுக்குடன் அறிவித்துள்ளனர். படத்துக்கு வரலாறு முக்கியம் என பெயர் வைத்துள்ளனர்.

Actor Jiiva new movie titled as Varalaru Mukiyam, jiiva mother tongue, jiiva wife, jiiva height, jiiva movies list tamil, jiiva net worth, jiiva age, jiiva 83, ஜீவா, நடிகர் ஜீவா, நடிகர் ஜீவா வரலாறு முக்கியம், வரலாறு முக்கியம்

இந்தப் படம் ரொமான்டிக் காமெடியாக தயாராகியுள்ளது. படம் வெற்றி பெற்றால் சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தொடர்ந்து தமிழில் படம் தயாரிக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் வரலாறு முக்கியம் தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படம். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor jiiva

அடுத்த செய்தி