முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி ஆறுதல்… குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார்…

விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி ஆறுதல்… குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார்…

மறைந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் ஜெயம் ரவி.

மறைந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் ஜெயம் ரவி.

Actor Jayam Ravi : கடந்த 10 ஆண்டுகளாக ஜெயம் ரவியின் தீவிர ரசிகராக இருந்த செந்தில், சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.

  • Last Updated :

மதுரையில் விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் மன்றத் தலைவரின் இல்லத்திற்கு நேரில் சென்று நேரில் நடிகர் ஜெயம் ரவி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவருடைய குழந்தைகளுடைய கல்வி செலவையும் ஏற்பதாக அவர் உறுதி அளித்திருக்கிறார்.

மதுரையில் தனது புதிய படத்திற்கான ஷூட்டிங்கில் இருந்த ஜெயம் ரவி, ரசிகர் செந்திலின் உயிரிழப்பு குறித்து அறிந்ததும், அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த செந்திலின் புகைப்படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அங்கிருந்த ஜெயம் ரவி, செந்திலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ரசிகர் செந்திலின் குடும்ப நலனுக்காக ரூ.5 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், இரு குழந்தைகளுக்குமான கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - ‘சினிமாடிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் நிலையூரைச் சேர்ந்தவரான செந்திலுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செந்தில் இருந்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ஜெயம் ரவியின் தீவிர ரசிகராக இருந்த செந்தில், சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.

இதையும் படிங்க - எந்தெந்த நடிகர்களின் படங்கள் இதுவரை 10 நாட்களில் 300 கோடி வசூல் செய்துள்ளது ?

ரசிகரின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்த ஜெயம் ரவியின் இந்த செயல்பாட்டை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அகிலன், பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

First published:

Tags: Actor Jayam Ravi