Home /News /entertainment /

நவம்பர் மாதத்திற்கு தள்ளி போகும் ஜெயம்ரவியின் அகிலன் பட ரிலீஸ்…

நவம்பர் மாதத்திற்கு தள்ளி போகும் ஜெயம்ரவியின் அகிலன் பட ரிலீஸ்…

அகிலன் படத்தின் ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர்

அகிலன் படத்தின் ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர்

Agilan Jayam Ravi : துறைமுகம், கப்பல், கடத்தல் என அகிலன் படம் ஆக்சன் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் ரிலீஸ், நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகி உள்ள நிலையில் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.

    செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அகிலன் திரைப்படம் வெளியாகும் என முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆக்சன் – த்ரில்லர் ஜேனரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்தின் மேக்கிங் குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு - சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தப் படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். துறைமுகம், கப்பல், கடத்தல் என அகிலன் படம் ஆக்சன் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தின் டிரைலர் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    சாம் சி.எஸ். படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசையை அளித்துள்ளார். செப்டம்பர் 30-ம் தேதி ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

    ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா விஜய்? புதிய தகவலால் பரபரப்பு

    இதில் பொன்னியின் செல்வன் டைட்டில் கதாநாயகனாக, அருள்மொழி வர்மன் – ராஜ ராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Jayam Ravi

    அடுத்த செய்தி