ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - ஜெயம் ரவி

ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்தோடு திரையரங்கிற்குள் சென்றனர்.

    நடிகர் ஜெயம் ரவி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் காட்சியை பார்த்தார். அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ஜெயம் ரவி, இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னுடைய படம் திரையில் வெளியாகியுள்ளது.

    Also read... Ponniyin Selvan Review: கல்கியின் நாவலுக்கு இணையாக இருக்கிறதா பொன்னியின் செல்வன் படம்?

    ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் படத்தை வெகுவாக ரசித்து பார்த்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ' isDesktop="true" id="811078" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

    இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு சஸ்பென்ஸ் என கூறி ஜெயம் ரவி சென்றார்.

    செய்தியாளர்: சுரேஷ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Jayam Ravi, Ponniyin selvan