ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா பாதிப்பு… தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தல்

நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா பாதிப்பு… தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தல்

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – ஜெயம் ரவி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 2 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது பிரபலங்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

  கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தவறாமல் மாஸ்க் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பாராக. என்று கூறியுள்ளார்.

  கடந்த சில மாதங்களில் மட்டும் சரத்குமார், கமல்ஹாசன், த்ரிஷா, விக்ரம், அருண் விஜய், விஷ்ணு விஷால், மகேஷ்பாபு, வடிவேலு, சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  பார்ட்டி வியர் உடையில் தாறுமாறு கவர்ச்சியில் ஷிவானி..

  ஜெயம்ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வசூல் வேட்டையில் 500 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.

  கிறங்கடிக்கும் அழகில் ரகுல் ப்ரீத் சிங்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

  இந்தப்படத்தில் ராஜராஜன் என்னும் அருள் மொழி வர்மன் கேரக்டரில், கம்பீரமான நடிப்பை ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். முதல் பாகம் சூப்பர் ஹிட்டான நிலையில், பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு கோடையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Jayam Ravi