Janagaraj: ட்விட்டரில் இணைந்த மூத்த நடிகர் ஜனகராஜ்!

ஜனகராஜ்

அவர் திரைக்கு திரும்பியதை நடிகரின் பல ரசிகர்கள் அன்புடன் வரவேற்றனர்.

  • Share this:
    நடிகர் ஜனகராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் இணைந்துள்ளார்.

    தனது பிறந்தநாளில் பிரபல நடிகர் ஜனகராஜ், ட்விட்டரில் சேர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தனது பிறந்தநாளில் தனது சமூக ஊடக பயணத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாக அதில் பதிவிட்டிருந்தார். இது அவரது உண்மையான கணக்கா அல்லது போலி கணக்கா என மக்கள் சந்தேகித்தாலும், பல திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள், அவரது அக்கவுண்டை பகிரத் தொடங்கி, லைக் செய்தனர். இதனால் இது அவருடைய உண்மையான கணக்கு என்பதை உறுதிப்படுத்தியது. மேலும் சாந்தனு பாக்யராஜ் போன்ற நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்களும் சமூக ஊடகத்திற்கு ஜனகராஜை வரவேற்றனர்.



    பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் சேதுபதியின் 96 படத்தின் மூலம் ஜனகராஜ் மீண்டும் நடிக்க வந்தார். த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அந்தப் படத்தை பிரேம் குமார் இயக்கியிருந்தார். அதில் ஜனகராஜ் ஒரு பாசமுள்ள பள்ளி காவலாளி வேடத்தில் நடித்திருந்தார்.

    அவர் திரைக்கு திரும்பியதை நடிகரின் பல ரசிகர்கள் அன்புடன் வரவேற்றனர். 96 படத்துக்குப் பிறகு, ஜனகராஜ் சாருஹாசனின் தா தா 87 படத்தில் நாயுடு வேடத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களையும் தவிர, அவர் புதிதாக எதிலும் கையெழுத்திடவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: