ஜெய்யின் ‘லவ் மேட்டரில்’ என்ட்ரி கொடுத்த நடிகை!

Web Desk | news18
Updated: June 3, 2019, 8:48 PM IST
ஜெய்யின் ‘லவ் மேட்டரில்’ என்ட்ரி கொடுத்த நடிகை!
நடிகை வைபவி
Web Desk | news18
Updated: June 3, 2019, 8:48 PM IST
ஜெய்யின் ‘லவ் மேட்டர்’ என்ற படத்தில் வைபவி நாயகியாக நடிக்கவுள்ளார்.

விஜய்யின் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் நடிகர் ஜெய். அதன் பின்னர் ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜெய்க்கு இறுதியாக வெளியான படம் நீயா 2. இதையடுத்து தற்போது விஜய் தந்தை இயக்கத்தில் லவ் மேட்டர் என்ற படத்தில் நடிக்கிறார். இது ஜெய்க்கு 25-வது படமாகும்.

டூரிங் டாக்கிஸ் படத்துக்குப் பின், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் தற்போதைய தலைமுறையினரின் காதலைப் பற்றி கதையமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கெனவே இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிக் பாஸ் ஐஸ்வர்யா, நடிகை அதுல்யா ரவி ஆகிய நடிகைகள் ஒப்பந்தமாகியிருந்தனர். ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு பதிலாக நடிகை வைபவி நடிக்கவுள்ளார். வைபவி இதற்கு முன்னதாக போடு ராஜா, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் கதாநாயகியாக நடித்தவர்.

இந்தப் படத்தில் நடிகர் ஜெய் தனது கேரக்டருக்கான பெயருக்கு விஜய் என்று பெயர் சூட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: இயக்குனர்களின் குரு மணிரத்னம்...!

First published: June 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...