• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்...!

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்...!

ஜெய்

ஜெய்

ஜெய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய பார்ட்டி பல வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. சுசீந்திரன் இயக்கியிருக்கும் சிவ சிவா படமும், வெற்றி இயக்கியிருக்கும் எண்ணித் துணிக படமும் போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜெய் பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தில் நடிப்பது தெரிந்ததே. இதில் அவர் சூப்பர் ஹீரோவாக நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழின் முன்னணி நாயகர்கள் சூப்பர் ஹீரோக்கள் போல சாகஸங்கள் செய்வதால், தனியாக சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் தமிழில் வருவதில்லை. முகமூடி படத்தில் அப்படியொரு சூப்பர் ஹீரோவை உருவாக்க மிஷ்கின் முயன்றார். அது அரைகுறை முயற்சியாக தோல்வியடைந்தது. அதன் சூப்பர் ஹீரோ என்ற ரிஸ்கை யாரும் எடுக்கவில்லை. ஷங்கரின் எந்திரன், 2.0 விதிவிலக்கு.

நலன் குமாரசாமி ஆர்யா நடிப்பில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்குகிறார். தயாரிப்பு ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன். பல காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்புவோம் என நலன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இந்நிலையில், ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக நடிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சின்ன பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படம் எடுக்கையில் அது கட்டுமரத்தில் டைட்டானிக் கதையை எடுத்தது போல் பரிதாபமாக அமையும்.. ஜெய்யின் பிசினஸை வைத்து எப்படி சூப்பர் ஹீரோ படத்தை எடுத்திருப்பார்கள் என்பது வியப்புக்குரிய விஷயம்

பிரேக்கிங் நியூஸை ஆன்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். ஜானி லால், வில்லியம்ஸ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்;. ஜான் பீட்டர் இசையமைக்கிறார். ராகுல் பிலிம்ஸ் திருக்கடல் உதயம் படத்தை தயாரித்துள்ளார்

Also read... RC15  முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த ஷங்கர்!

ஜெய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய பார்ட்டி பல வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. சுசீந்திரன் இயக்கியிருக்கும் சிவ சிவா படமும், வெற்றி இயக்கியிருக்கும் எண்ணித் துணிக படமும் போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளன. இவை தவிர நான்குப் படங்கள் சிவா கைவசம் உள்ளன.

ஜெய்யின் ஆக்ஷன் படம் வலியவனே ஓடவில்லை. அவரை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்க ரசிகர்களுக்கு மனத்தடை உள்ளது. சூப்பர் ஹீரோவாக அவரை ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக் கொண்டால் அதுதான் உண்மையான பிரேக்கிங் நியூஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: