தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர் ஜெய், 3 ஆண்டுகளுக்கு பிறகு கார் பந்தய களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் 14 கிலோ எடை வரை குறைத்திருக்கிறார்.
கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் ஜெய்க்கு தொழிலதிபர் வருண் மணியனும், எண்ணித்துணிக படக்குழுவும் ஸ்பான்சர் செய்துள்ளனர்.
MRF மற்றும் JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்தில்தான் ஜெய் களமிறங்கியுள்ளார்.
தளபதி விஜய்யின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் சினிமாவில் ஜெய் அறிமுகமானார். இதன்பின்னர் சென்னை 600028-ல் ஜெய்யின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமாருடன் இணைந்து இவர் ஹீரோவாக நடித்தது, அவருக்கு ஏராளமான ரசிகர்களை தேடித்தந்தது.
ராஜா ராணி படத்திலும் நயன் தாராவின் காதலராக வந்து ஜெய் அசத்தியிருப்பார். இதன்பின்னர் பெரிய படங்கள் ஏதும் அமையாத நிலையில், தற்போது ஜெய் வசம் 5-க்கும் அதிகமான படங்கள் உள்ளன. ஹிட் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகுவதால் அவரிடமிருந்து நல்ல படம் ஒன்றை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema